கவிச் சோலை கருகி,
மனம் போன போக்கெல்லாம் திரிந்து,
கரை சேர்ந்தேன்.
மண்ணில் புதைந்த விதை போல,
கற்பனை என்னுள் உறங்க,
உணர்ச்சி பெருக்கில் இன்று முளைத்தேன்,
கவிதையாய் பூத்தேன்.
மீண்டும் ஒரு முறை கை கோர்த்து,
மொழியில்லா மொழியில் பேச வந்தேன்,
கவிதையில் கற்பனை விதைக்க வந்தேன்,
உணர்வால் உவகையுற்றேன்.
இனி நான் அடிமை அல்ல,
என் கவிதைகளும் அடிமை அல்ல,
நான் கவிதையாய் வாழும் கலைஞன்,
கவிதை நான், நானே கவிதை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக