ஞாயிறு, 11 நவம்பர், 2007

பரத்தை !



அந்தி சாய்ந்த பிறகு...
சந்தியில் நின்று...
முந்தியை பந்தி விரிக்கும் ..
பத்தினி பரத்தை நாங்கள்!

பசி நோய்க்கு மருந்தாக ;
பண பேய்க்கு உணவாக ;
பிணமாய் வாழும் ;
கவரிமான்கள் நாங்கள்!

வியாழன், 8 நவம்பர், 2007

ஆசை !


காரில் செல்ல வேண்டுமென நெடுநாள் ஆசை;
நிறைவேறியது ;
பிளாட்பார பிதாமகன்களை ...
கைது செய்து காரில் ஏற்றியபோது!

விதவை !



கல்லுக்கு வைத்தால் கடவுளாம் ;
நான் வைத்தால் குற்றமாம் ;
பொட்டு!