இருந்தார். அவருக்காகவும், தெரியாத மற்றவர்களுக்கும் இந்தப் பதிவு.
சங்க காலத்தில் மடலேறுதல் என்னும் ஒரு வழக்கு இருந்தது. அது என்னவென்றால் தலைவி, தலைவனை .மணம் செய்ய மறுத்தால், தலைவன் காதல் மிகுதியில் மடலேறி தலைவியை அடைவான் என்பதாம்.
காமம் மிக்க தலைவன் குதிரையைப் போல பனை மடலால் ஓர் உருவம் செய்து ,அதன் கழுத்தில் மணிமாலை முதலியவற்றைப் பூட்டி அதில் ஊர்வான் .அவன் தன கழுத்தில் யாரும் சூடாத எருக்க மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிந்து இருப்பான்.ஆவிரம் பூ மாலையையும் சில சமயம் சூடி இருப்பான் .
மேலும் ,அவன் ஒரு படத்தில் தனது உருவத்தையும் ,தலைவியின் உருவத்தையும் ஏந்தி ஊர் முழுக்க சுற்றி வருவான் .
இங்ஙனம், அவன் வருவதைக் கண்ட ஊரார் "இந்தத் தலைவிக்கும் இந்தத் தலைவனுக்கும் நட்பு உண்டு என்று அறிந்துக் கொள்வர் .மேலும் தலைவனை இந்த நிலைக்கு தள்ளிய தலைவியைப் பழிப்பர் .
ஊராரின் நகைப்புக்கு உள்ளான தலைவி மணம் வருந்துவாள் . தலைவன் மடலேறும் அளவுக்கு தான் காரணமாய் இருந்ததை எண்ணி துன்பமடைவாள். தலைவனின் உண்மையான அன்பினை நினைத்து நெஞ்சுருகுவாள். செவிலித்தாயும் ,நற்றாயும் நடந்ததை அறிந்து ,தலைவி மீது தலைவன் கொண்டிருக்கும் காதலை உணர்ந்து இருவருக்கும் மணமுடித்து வைப்பர்.
இவ்வாறு தலைவன் தான் கொண்ட காதலை ஊரார் அறிய தெரியப்படுத்தி ,அதன் மூலம் தலைவியை அடைவது மடல் ஏறுதல் எனப்படும் .
சங்க இலக்கியத்தில் பெண்கள் காம மிகுதியால் மடலேருவதாய் எங்கும் சொல்லப்படவில்லை .அனால் சங்கம் மருவிய காலத்தில் ஆழ்வார்களால் சொல்லப்பட்டு இருக்கின்றது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக