நடித்தப்படமும் அதில் வரும் சம்பவங்களும் நமக்கு நினைவில் இருக்கும் . அப்பாடலின் சுவை பலருக்கு தெரியாததால் .. அதனை என்னால் இயன்ற அளவு இங்கு விளக்கலாம் என்பதற்காக இந்த பதிவு .
சங்க இலக்கியங்களிலே அக இலக்கிய நூலான குறுந்தொகையில் இரண்டாம் பாடலாய் இடம் பெற்றது இப்பாடல் .
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.
திணை :குறிஞ்சி . பாடியவர் : இறையனார்.
தலைவியின் கூந்தலை விட மணமுடைய பொருள் வேறு ஏதேனும் உண்டா? என்று வண்டினை வினவுவதே, இப்பாடல் .கூந்தலில் உள்ளது இயற்கை மணமா? செயற்கை மணமா?என்பதெல்லாம் இப்பாடலில் பாடப்படவில்லை என்பதே உண்மை. இனி இப்பாடலின் விளக்கத்தைக் காணலாம் .
உயிருக்கு ஊறு செய்யாத இனங்களில் வண்டினமே சிறந்தது ,என்பது வடநூல் வழக்கு . அத்தகைய வண்டினத்தில் சிறந்தது தும்பியே ஆகும்.சிறந்த மணத்தை நாடிச் சென்று பூந்தாதை உண்ணும் வாழ்கை உடையது தும்பியே , எனவே தான் புலவர் கொங்கு தேர் வாழ்கை என்று தும்பியை விளிக்கின்றார் .
அஞ்சிறை தும்பி என்பது அகத்திலே சிறகுகளை உடைய தும்பி என்று பொருள்படும் . பறக்கும் உயிர்களில் எல்லாம் சிறகுகள் வெளியே தெரியுமாறு அமைவதுதான் இயற்கை . ஆனால் தும்பி தான் சிறந்த உயிரினம் ஆயிற்றே! எனவே தான் உட்சிறகுகளைக் கொண்ட தும்பி, உனை நான் ஒன்று கேட்பேன், நீ கூறுவாயாக,எனத் தும்பியை அழைக்கின்றார் .
காமம் செப்பாது என்பது குறிப்பதாவது, தலைவன் குறிஞ்சி நிலத் தலைவன். அவன் வினவும் வண்டோ குறிஞ்சி நிலத்தையே சார்ந்தது . தனது நிலத்து வண்டாயின் தனக்காக உண்மை கூறாமல் சிறப்பித்து ஏதேனும் கூறி விடுமோ?, என்றெண்ணி தான் கண்டது மொழிக! .. எனக் கூறினான் .
பயிலியது கெழீஇய நட்பின், என்பது எழுமையும் என்னோடு தொடர்ந்து வரும் எனப்பொருள் படும். அத்தகைய நட்போடுக் கூடிய மயில் போன்ற மென்மையுடைய தலைவி ,என் தலைவி!, எனக் கூறுகின்றான் .
குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த பகுதிகளும் ஆகும். அந்த நிலத்தில் வசிக்கும் பறவை மயில் . மயிலை மென்மைக்கு ஒப்புமையாய் கூறப்படுதல் பெருமரபு . எனவே தான் மயில் இயல் எனப் பாடுகின்றான் தலைவன்.
தலைவி பொழிலிடை உலாவிய போது கண்ட நடை நினைத்து மயில் இயல் என அழைத்தான் என்று கூடப் பொருள் கொள்ளலாம்.
செறி எயிற்று, என்பது நெருங்கிய பற்களை உடைய என பொருளாகும் . தலைவி நெருங்கிய பற்களை உடையவளாய் இருக்கிறாள் என்பது அழகான சிரிப்பைக் கொண்டவள் எனக் கொள்ளலாம் .
இத்தகைய ,மயில் போன்ற மென்மையும் ,அழகிய சிரிப்பினையும் உடைய எனது தலைவியின் கூந்தலைப் போல நறுமணம் மிக்க பொருள் ஏதேனும் உள்ளதா ? நீ சொல் ! உயரிய வண்டே ! என்பதுவே இந்தப் பாடலின் பொருளாகும் .
பேச முடியாத வண்டிடம் ,ஏன் தலைவன் வினவினான்? என்றால் , வண்டு ஒரு நிலத்தில் மட்டும் தங்காது ,எல்லாவிடத்தும் சென்று அங்கு நறுமணம் உடைய பூந்தாதுக்களை நாடி தேன் பருகி வருவன .வண்டுக்குத்தான் நறுமணம் உடைய அனைத்து மலர்களும் தெரியும். எனவே தான்! வண்டினை, வினாவினான் .
தலைவியின் கூந்தலே ! மிக்க நறுமணம் உடையது !என்று முடிபு செய்து, வண்டு மாற்றுக் கருத்து ஏதும் கூறாது என்று எண்ணிக் கூட வண்டிடம் கேட்டான் எனக் கொள்ளலாம் .

2 கருத்துகள்:
Arumai
http://www.masusila.com/2011/12/blog-post_29.html
கருத்துரையிடுக